இந்தியா

அந்தேரி சுரங்கப் பாதையை மூடிய வெள்ளம்: மும்பையில் தொடரும் கனமழை

DIN

மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை, மும்பையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

சியோன் கிழக்கு மற்றும் அந்தேரி சுரங்கப் பாதை, கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மூழ்கிப் போயுள்ளது.

இந்த நிலையில், வரும் 13 - 14ஆம் தேதிகளில் மும்பையில் கனமழைக்கு பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீயணைப்புப் படையினர் மற்றும் அனைத்து பேரிடர் மேலாண்மைப் படைகளும் தயார் நிலையில் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித் துறை சார்பில், தங்குமிடங்களை தயார்ப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

இது மட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களிலும் இன்று காலை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

SCROLL FOR NEXT