இந்தியா

ஸ்ரீநகரில் 50 படுக்கை வசதியுடன் கரோனா மையத்தை உருவாக்கிய ராணுவம்

12th Jun 2021 06:00 PM

ADVERTISEMENT


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில், பொதுமக்களுக்கு உதவும் வகையில், 50 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை இந்திய ராணுவம் அமைத்துக் கொடுத்துள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து தற்போது மெல்ல குறைந்து வரும் நிலையில், கரோனா பரவல் தீவிரமடைந்திருந்த போது, கரோனா சிகிச்சை கிடைக்காமல் ஏராளமான மக்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில், கரோனா மூன்றாம் அலை உருவாக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்திருக்கும் நிலையில், ஸ்ரீநகரில் 50 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை இந்திய ராணுவம் ஏற்படுத்தியுள்ளது. 
 

Tags : Srinagar Indian army
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT