இந்தியா

தில்லியில் புதிதாக 213 பேருக்கு கரோனா

DIN


தில்லியில் புதிதாக 213 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 71,513 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 213 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.30 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

தில்லியில் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,30,884 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 497 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 28 பேர் பலியாகியுள்ளனர். 

இதுவரை மொத்தம் 14,02,474 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 24,800 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 3,610 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தில்லியில் ஒட்டுமொத்தமாக இறப்பு விகிதம் 1.73 சதவிகிதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT