இந்தியா

கேரளத்தில் புதிதாக 13,832 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் புதிதாக 13,832 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் பதிவிடப்பட்டுள்ளது:

"கேரளத்தில் இன்று 13,832 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,08,734 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 12.72 சதவிகிதம். 

கடந்த நாள்களில் 171 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,975 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 82 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 12,986 பேர் தொடர்பிலிருந்ததன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 700 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,75,769 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் 1,29,488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT