இந்தியா

பிரபல பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ராதாமோகன் மறைவு:  பிரதமர் மோடி இரங்கல்

11th Jun 2021 03:37 PM

ADVERTISEMENT

புதுதில்லி: பிரபல பொருளாதார வல்லுநரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பேராசிரியர் ராதாமோகன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "பேராசிரியர் ராதாமோகன் அவர்கள், விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். குறிப்பாக. நிலையான மற்றும் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றியவர்.

பொருளாதாரம் மற்றும் சூழலியல் தொடர்பான பாடங்களில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அறிவுக்காக மதிக்கப்பட்டார். அவரது மறைவை அறிந்து துயரமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி" என்று கூறியுள்ளார்.

Tags : PM condoles Economist
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT