இந்தியா

ஒடிசாவில் நக்சல் சுட்டுக்கொலை

11th Jun 2021 04:23 PM

ADVERTISEMENT

ஒடிசாவில் சிறப்பு பாதுகாப்புப்படையினருக்கும் நக்சலுக்கும் இடையே நடந்த மோதலில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஒடிசா, பர்ஹர் மாவட்டத்தில் உள்ள பதம்பூர் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு பாதுகாப்புப்படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், சிறப்பு பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு சிறப்பு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 
அத்துடன் ஏ.கே. ரக துப்பாக்கி உள்ளிட்டவற்றையும் பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். 
 

Tags : odisha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT