இந்தியா

மும்பையில் தொடரும் கனமழை: வெள்ளநீரை அகற்றும் பணிகள் தீவிரம்

11th Jun 2021 03:01 PM

ADVERTISEMENT


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்ததால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம்  சூழ்ந்துள்ளது. முக்கியச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

மும்பை மக்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி தரும் வகையில், இன்று காலை முதல் மும்பையில் மழை நின்றுள்ளது.  ஆனால், தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மும்பை மேயர் கிஷோரி கூறுகையில், 458 பம்புகள் மூலம் சாலைகளிலிருந்து வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. சுமார் 73000 கழிவுநீர் வடிகால் மூடிகளை சரியாக பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது என்றார்.

மும்பையில் கழிவுநீர் வடிகால்வாய் மூடாமல் இருந்த நிலையில், அதில் இரண்டு பெண்கள் தவறி விழுந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கையில், ஃபைடர் மூடிகளைக் கொண்டு மூடப்பட்டிருந்ததால், அவை வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இனி, கழிவுநீர் வடிகால்வாய் மூடிகளை பூட்டும் வகையில் மூடியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

ADVERTISEMENT

மும்பையில் செவ்வாய்க்கிழமை முதல் பெய்து வரும் மழை காரணமாக, தண்டவாளங்களில் மழைநீர் சூழ்ந்து கொண்டிருப்பதால் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
 

Tags : mumbai rain maharashtra heavy rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT