இந்தியா

28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம் செய்து கொண்ட முதியவர்

10th Jun 2021 03:55 PM

ADVERTISEMENT


உலகில் வேறு எங்குமே நிகழாத ஒரு நிகழ்ச்சியாக, 28 மனைவிகள், 35 குழந்தைகள், 126 பேரன் - பேத்திகள் முன்னிலையில், ஒரு முதியவர் 37வது திருமணத்தை செய்து கொண்டுள்ளார்.

இது எங்கு, எப்போது நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை. இந்த விடியோவை ரூபின் ஷர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது எங்கு, எப்போது நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை. இந்த விடியோவை ரூபின் ஷர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைக் கூட செய்ய முடியாமல் மணமக்களின் பெற்றோர் கலங்கி நிற்கிறார்கள். ஆனால் இங்கே, வயதான ஒரு முதியவர், மிக அழகிய இளம்பெண் ஒருவரை, தனது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்கிறார். குடும்பத்தினர் என்றால், பல மாநில அரசுகள் கூறுவது போல 20 பேர் எல்லாம் இல்லை. இவரது 28 மனைவிகள், 35 பிள்ளைகள், அவர்களுக்குப் பிறந்த 126 பேரன் - பேத்திகள் சூழ்ந்திருக்க அழகிய இளம்பெண்ணை 37வது மனைவியாக மணமுடிக்கிறார் அந்த முதியவர். இது எந்த நாட்டில் நடந்த திருமணம், திருமணம் செய்து கொண்ட முதியவர் யார் என்பது குறித்த எந்த விவரமும் தெரியவரவில்லை.

இந்தியாவில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைக் கூட செய்ய முடியாமல் மணமக்களின் பெற்றோர் கலங்கி நிற்கிறார்கள். ஆனால் இங்கே, வயதான ஒரு முதியவர், மிக அழகிய இளம்பெண் ஒருவரை, தனது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்கிறார்.

ADVERTISEMENT

குடும்பத்தினர் என்றால், பல மாநில அரசுகள் கூறுவது போல 20 பேர் எல்லாம் இல்லை. இவரது 28 மனைவிகள், 35 பிள்ளைகள், அவர்களுக்குப் பிறந்த 126 பேரன் - பேத்திகள் சூழ்ந்திருக்க அழகிய இளம்பெண்ணை 37வது மனைவியாக மணமுடிக்கிறார் அந்த முதியவர்.

இது எந்த நாட்டில் நடந்த திருமணம், திருமணம் செய்து கொண்ட முதியவர் யார் என்பது குறித்த எந்த விவரமும் தெரியவரவில்லை. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT