இந்தியா

கனமழை காரணமாக வெள்ள நீரில் தத்தளிக்கும் லக்னௌ

10th Jun 2021 12:49 PM

ADVERTISEMENT


லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், இன்று காலை முதல் லக்னெள மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டுள்ளது.

தொடர்ந்து இன்று முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், உத்தரகண்ட், அரியாணா, சண்டிகர், தில்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்றும், இடி மின்னலும் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT