இந்தியா

மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை

8th Jun 2021 12:05 PM

ADVERTISEMENT


மும்பை: மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை பலத்த மழை கொட்டித் தீர்த்துள்ளது. இது பருவமழை தொடங்குவதற்கு முந்தைய மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மும்பையில் இன்று காலை முதல் 11 மணி வரை மல்வானி, போரிவாலி உள்ளிட்ட பகுதிகளில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த சனிக்கிழமை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதற்கான அனைத்து சாதகமான சூழல் தென்பட்டாலும் மும்பையில் இதுவரை பருவமழை பெய்யத் தொடங்கவில்லை. 

தற்போது மும்பையில் பெய்து வருவது வெப்பச் சலனம் காரணமாக பெய்யும் மழை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பரவலாக பெய்யும். இதனை பருவமழைக் காலத்துக்கு முன்கூட்டி பெய்யும் மழை என்று கூறலாம் என்கிறார்கள்.
 

ADVERTISEMENT

Tags : Mumbai heavy rain monsoon
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT