இந்தியா

பாரம்பரிய சின்னமாக மாறவிருக்கும் பழைய ஜம்மு ரயில் நிலையம்

8th Jun 2021 04:42 PM

ADVERTISEMENT


ஜம்மு:  ஜம்மு நகரின் மிக முக்கியப் பகுதியான விக்ரம் சௌக் அருகே அமைந்திருக்கும் பழைய ஜம்மு ரயில் நிலையம் பாரம்பரிய சின்னமாக மாற்றப்பட உள்ளது.

பொலிவுறு நகர திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் வகையில், விக்ரம் சௌக் ரயில் நிலையத்தை, பாரம்பரிய சின்னமாக மாற்றி சுற்றுலாத் தலமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக மண்டல ஆணையர் தெரிவித்துள்ளார்.

1897ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஜம்மு ரயில் நிலையம், பல்வேறு காலக்கட்டத்துக்குப் பிறகு பயன்பாட்டில் இல்லாமல் போனது. இதையடுத்து, தற்போதிருக்கும் இந்த பழைய ரயில் நிலையத்தின் கட்டுமானங்களை அப்படியே சீரமைத்து புராதனச் சின்னமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்காக, இந்த ரயில் நிலையத்தின் பழைய புகைப்படங்கள் தேடி எடுக்கப்பட்டு, அதனை அப்படியே மீண்டும் உருவாக்க நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : jammu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT