இந்தியா

புதுவையில் கரோனா பாதிப்பு மீண்டும் 500-ஐத் தாண்டியது

8th Jun 2021 02:26 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுவையில் 53 நாள்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை 500-க்கும் கீழ் குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 545 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

அதே வேளையில், கரோனாவுக்கு பலியானோர் எணணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 400 பேருக்கும், காரைக்காலில் 112 பேருக்கும், ஏனாமில் 24 பேருக்கும், மாஹேயில் 9 பேருக்கும் என 545 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1.10 லட்சமாக உயா்ந்தது.

மருத்துவமனைகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா் என மொத்தம் 7,147 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, புதுச்சேரியில் 6 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1,644- ஆக அதிகரித்தது. 938  போ் செவ்வாய்க்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 

புதுவையில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை படிப்படியாகக் குறைந்து வருவதால் பொதுமுடக்கத்தில் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15- ஆம் தேதி 413 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதன் பிறகு தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. புதிய உச்சமாக மே 11- ஆம் தேதி 2,049 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதுவையில் 53 நாள்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நாள் கரோனா தொற்று பாதிப்பு நேற்று 500-க்கு கீழ் குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் 500-ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Tags : pondy corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT