இந்தியா

45-60 வயதினருக்கு அதிகபட்சமாக 41.7% தடுப்பூசி: சுகாதாரத் துறை

8th Jun 2021 12:12 PM

ADVERTISEMENT

நாட்டில் 45 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு அதிகபட்சமாக 41.7 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 33 சதவிகிதமும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு 25.3 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

படிக்க: தமிழகத்திற்கு 42.58 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு

நாட்டில் கரோனா இரண்டாம் அலை பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் மத்திய சுகாதாரத் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ADVERTISEMENT

அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் முதல் மருத்துவப் பணியாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

படிக்க: தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர் தேவையில்லை: மா.சுப்பிரமணியன்

அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

இறுதியாக 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதில் அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு 41.7 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 33 சதவிகிதமும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு 25.3 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : coronavirus vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT