இந்தியா

கரோனா நோயாளிகளுக்கு தலைசீவி, முகச்சவரம் செய்யும் முன்களப் பணியாளர்கள்

8th Jun 2021 11:07 AM

ADVERTISEMENT


ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரோனா நோயாளிகளுக்கு, தலைவாரி, முகச்சவரம் செய்யும் மருத்துவப் பணியாளர்களின் சேவை நெஞ்சை நெகிழ வைக்கிறது.

பிரஹம்பூரில் உள்ள எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தங்களது அன்றாட மருத்துவப் பணிகளையும் தாண்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரோனா நோயாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்தும் மருத்துவ முன்களப் பணியாளர்கள் தங்களது பணிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த மருத்துவமனையில் எடுக்கப்பட்ட விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், கரோனா நோயாளிகளின் தலையை வாரிவிடுவதும், வயதான கரோனா நோயாளிகளுக்கு வாஞ்சையோடு முகச்சவரம் செய்யும் முன்களப் பணியாளர்களின் சேவை அனைவரின் மனங்களையும் வென்று வருகிறது.

இவர்களது பணிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்து குவிகிறது.
 

ADVERTISEMENT

Tags : COVID-19 Odisha corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT