இந்தியா

தனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை அறிவிப்பு

8th Jun 2021 09:25 PM

ADVERTISEMENT

சேவைக்கட்டணத்துடன் கூடிய கரோனா தடுப்பூசிக்கான விலைப்பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது. 

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சேவைக்கட்டணத்துடன் கூடிய கரோனா தடுப்பூசி விலைப்பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

அதன்படி  ஸ்புட்னிக் தடுப்பூசியை  ரூ.948 விலையுடன் ஜிஎஸ்டியாக ரூ.47 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.1145க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கோவாக்சின் தடுப்பூசியை ரூ.1200 விலையுடன் ஜிஎஸ்டி ரூ.60 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.1410க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் கோவிஷீல்ட் தடுப்பூசியானது  ரூ.600 விலையுடன் ஜிஎஸ்டி ரூ.30 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.780க்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : coronavaccine Covid19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT