இந்தியா

வங்கதேசத்திலிருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை கொண்டு வரும் கும்பல் கைது

8th Jun 2021 01:26 PM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியா - வங்கதேச எல்லையில், கள்ள ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்து இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடும் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைத செய்துள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவுக்குள் கள்ள நோட்டை கொண்டு வரும் மிகப்பெரிய கும்பலைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 67வது பட்டாலியன் படை வீரர்கள், ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், இருவருமே இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள ரூபாய் நோட்டுகள் வங்கதேசத்திலிருந்து துப்ரு வழியாக இந்திய எல்லைக்குள் கொண்டு வரப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : Rupee bsf indian
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT