இந்தியா

பிகாரில் ஜூன் 14 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள்

8th Jun 2021 04:11 PM

ADVERTISEMENT


பாட்னா: பிகாரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறையில் இருக்கும் பொதுமுடக்கத்தில் வரும் 14-ஆம் தேதி முதல் தளர்வுகள் நடைமுறைக்கு வருகிறது.

அந்த வகையில் ஜூன் 14 முதல், பிகாரில் உள்ள சந்தைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தைகள் மாலை 5 மணி வரை செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சில்லறை, தனியார் மற்றும் அரசுத் துறைகளுக்கும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மாலை 4 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் இரவு நேர பொதுமுடக்கம் இரவு 7 முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரி உள்பட அனைத்து கல்வி நிலையங்களும் அடுத்த உத்தரவு வரும் வரை மூடியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : Bihar lockdown
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT