இந்தியா

மாநிலங்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி: அகிலேஷ் யாதவ் வரவேற்பு

8th Jun 2021 04:04 PM

ADVERTISEMENT


மாநிலங்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"மக்களின் சீற்றத்தைப் பார்த்து மத்திய அரசு கரோனா தடுப்பூசியைக் கொண்டு அரசியல் செய்யாமல் தானே தடுப்பூசிகளை விநியோகிப்பதாக அறிவித்துள்ளது. பாஜகவின் தடுப்பூசிக்குத்தான் நாங்கள் எதிர்ப்பு. இந்திய அரசின் தடுப்பூசியை வரவேற்கிறோம். நானும் தடுப்பூசி செலுத்திக்கொள்வேன். தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்."

முன்னதாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமான தடுப்பூசி மாநிலங்களுக்கு ஜூன் 21 முதல் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT