இந்தியா

ஒடிசா: 70 சிறைக் கைதிகள், 5 ஊழியர்களுக்கு கரோனா

8th Jun 2021 10:35 AM

ADVERTISEMENT


ஒடிசா மாநிலம் குணுபூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் 113 சிறைக் கைதிகளில் 70 பேருக்கும், அதில் பணியாற்றும் 5 ஊழியர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறைக் கூடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தனியாகவும், கரோனா தொற்று பாதிக்காதவர்கள் தனியாகவும் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கடந்த மே மாதத்தில் மட்டும் ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 816 சிறைக் கைதிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 

Tags : odisha jail corona covid
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT