இந்தியா

நாட்டில் இதுவரை 36.82 கோடி கரோனா பரிசோதனைகள்

8th Jun 2021 09:34 AM

ADVERTISEMENT

நாட்டில் இதுவரை 36.82 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்படுவோரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

படிக்க: நாட்டில் இதுவரை 23.61 கோடி பேருக்கு தடுப்பூசி

ADVERTISEMENT

அந்தவகையில் நேற்று (திங்கள் கிழமை) ஒரே நாளில் 18 லட்சத்து 73 ஆயிரத்து 485 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 36.82 கோடி-ஆக (36,82,07,596) அதிகரித்துள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

Tags : coronavirus ICMR vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT