இந்தியா

நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்: ப.சிதம்பரம் 

6th Jun 2021 12:01 PM

ADVERTISEMENT


கரோனா நோய்த்தொற்றின் பொருளாதார விளைவுகளை மத்திய அரசு கையாண்ட விதத்தால் 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர் என்றும், இதுதான் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனையாக உள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் மக்களின் பொருளாதார நிலைமை முகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சுனாமி வேகத்தில் தாக்கி வரும் தொற்றின் இரண்டாவது அலையால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. 

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றின் பொருளாதார விளைவுகளை தொடர்ந்து விமரிசனம் செய்து வரும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

கரோனா பெருந்தொற்றின் பொருளாதார விளைவுகளை மத்திய அரசு கையாண்ட விதத்தை நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். இந்தப் பெருந்தொற்று கீழ் அடுக்கு நடுத்தர மக்களை எப்படிப் பாதித்திருக்கிறது என்று ஒரு அறிவு பூர்வமான ஆய்வை ஒரு வல்லுநரின் துணையுடன் நடத்தினேன்.

ADVERTISEMENT

அதில், 1004 நபர்கள் ஆய்வில் கலந்து கொண்டார்கள். கடந்த 14 மாதங்களில் தங்கள் மாத வருமானம், ஊதியம் குறைந்திருப்பதாக 880 நபர்கள் பதிலளித்தார்கள். 758 நபர்கள் தங்கள் குடும்பச் செலவு கூடியிருப்பதாகச் சொன்னார்கள். 725 நபர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து பணம் எடுத்திருக்கிறார்கள். 329 நபர்கள் தங்கள் உடமைகளை விற்றனர் அல்லது அடமானம் வைத்திருக்கிறார்கள். 702 நபர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள்

இந்த பெருந்தொற்றின் கீழ் அடுத்த நடுத்தர மக்களை எப்படியெல்லாம் பாதித்திருக்கிறது என்று குறித்து ஒரு அறிவுபூர்வமான ஆய்வை வல்லுநர் ஒருவர் துணையுடன் நடத்தினேன். அதன்படி, இந்த நடுத்தர மக்களும் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கும் இவர்களை விட வறுமையில் உள்ள எழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது?

23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் இயலாமையும் தவறான கொள்கைகளுமே காரணம் என்ற குற்றச்சாட்டு நியாயம் தானே? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

Tags : middle class people becoming poorer P Chidambaram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT