இந்தியா

பழம்பெரும் இந்தி திலீப் குமார் உடல்நிலை: சரத் பவார் நேரில் நலம் விசாரிப்பு

6th Jun 2021 07:02 PM

ADVERTISEMENT

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நிலை குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மருத்துவமனைக்கு நேரில் சென்று இன்று நலம் விசாரித்தார். 

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார்(98). சுவாசப் பிரச்னை காரணமாக இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திலீப் குமார் உடல் நிலை குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மருத்துவமனைக்கு நேரில் சென்று இன்று நலம் விசாரித்தார்.அத்துடன் திலீப் குமாரின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும சிகிச்சை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

இத்தகவலை தனது சுட்டுரையில் தெரிவித்த சரத்பவார் நல்ல ஆரோக்கியத்துடன் திலீப்குமார் விரைவாக குணமடைய விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

Tags : Sharad Pawar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT