இந்தியா

மத்திய அரசு நீல நிற டிக்கிற்காக போராடுகிறது: ராகுல் காந்தி

6th Jun 2021 08:04 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு மத்தியில், மோடி அரசாங்கம் நீல நிற டிக்கிற்காக போராடுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் உள்ளிட்டோரின் சுட்டுரை கணக்குகளில் நீலக்குறியீடு (டிக் மாா்க்) சனிக்கிழமை திடீரென்று நீக்கப்பட்டது. இதனால் சா்ச்சை எழுந்தது. பல்வேறு வலதுசாரி அமைப்புகளின் தலைவா்களும் இதற்கு அதிருப்தியும் எதிா்ப்பும் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவா்களின் சுட்டுரை கணக்குகளில் மீண்டும் நீலக்குறி இடப்பட்டது. 

இதுகுறித்து சுட்டுரை நிறுவனம் கூறியதாவது: ஒருவருடைய சுட்டுரை கணக்கு 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அதில் நீலக்குறி அகற்றப்படும். சரியான விவரங்கள் இல்லை என்றாலும் நீலக்குறி அகற்றப்படும். அந்த வகையில் வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவா்களின் சுட்டுரை கணக்குகளில் இருந்து நீலக்குறியீடு அகற்றப்பட்டது என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. 

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், 'மோடி அரசாங்கம் நீல நிற டிக்கிற்காக போராடுகிறது. நீங்கள் ஒரு கரோனா தடுப்பூசி செலுத்த விரும்பினால், நீங்கள் உங்களையே நம்பி இருங்கள்.' முன்னுரிமைகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

ADVERTISEMENT

Tags : rahul gandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT