இந்தியா

மாநிலங்களின் கையிருப்பில் 1.63 கோடி கரோனா தடுப்பூசிகள்

6th Jun 2021 03:56 PM

ADVERTISEMENT

மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் 1.63 கோடி கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இதுவரை, சுமாா் 24 கோடிக்கும் அதிகமான (24,60,80,900) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. 

இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 22,96,95,199 டோஸ் தடுப்பூசி (வீணானவை உள்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமாா் 1.63 கோடி (1,63,85,701) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. 

ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

ADVERTISEMENT

Tags : coronavaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT