இந்தியா

ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க ஏன் அனுமதிக்கக் கூடாது: அரவிந்த் கேஜரிவால் கேள்வி

6th Jun 2021 08:45 PM

ADVERTISEMENT

ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க ஏன் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக விநியோகம் செய்யும் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். திட்டத்தை செயல்படுத்தவிருந்த 2 நாள்களுக்கு முன்னரே மத்திய அரசு அதற்கு தடை விதித்துவிட்டது. திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறுகிறார்கள். ஆனால் 5 முறை மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. 

பீட்ஸா, பா்கா், ஸ்மாா்ட்போன் மற்றும் துணிமணிகள் உள்ளிட்டவற்றை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் போது ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க ஏன் அனுமதிக்கக் கூடாது. நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வீசி வரும் நிலையில், தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இல்லையெனில் ரேஷன் கடைகள் கரோனா தொற்றுபரவலுக்கான இடமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், 70 லட்சம் ஏழை மக்கள் பயன்பெறுவாா்கள். பிரதமர் இந்த திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். நாட்டின் நலனுக்கான விஷயங்களில் எந்தவிதமான அரசியலும் இருக்கக்கூடாது என்றார்.

ADVERTISEMENT

Tags : Arvind Kejriwal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT