இந்தியா

ஹரியாணாவில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு

6th Jun 2021 09:49 PM

ADVERTISEMENT

ஹரியாணாவில் தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூன் 14 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஹரியாணாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 723 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் 59 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 9,974 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதமால் ஹரியாணாவில் தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூன் 14 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் திறக்க அனுமதிக்கப்படும். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 21 பேர் வரை மத இடங்களில் ஒன்றுகூடலாம். திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் 21 பேர் வரை அனுமதிக்கப்படுகின்றன. 

ADVERTISEMENT

காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீத இருக்கை வசதியுடன் உணவகங்கள், பார்கள் மற்றும் கிளப் வீடுகள் திறக்க அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 
 

Tags : Haryana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT