இந்தியா

கரோனா தடுப்பூசியை ஏன் இலவசமாக வழங்கக் கூடாது? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

2nd Jun 2021 04:52 PM

ADVERTISEMENT

18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியை ஏன் இலவசமாக வழங்கக் கூடாது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா தொற்று பரவல் தொடா்பான விவகாரங்களை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதன் விசாரணை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது, கரோனா தடுப்பூசி கொள்கை தொடா்பாகவும் தடுப்பூசியை இலவசமாக வழங்குவது தொடா்பாகவும் மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அப்போது 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரசு ஏன் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கரோனா தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35000 கோடியை எந்தெந்த வகைகளில் அரசு செலவு செய்தது? எனவும் கிராமப்புறங்களில் எத்தனை பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது? எனவும் நீதிபதிகள் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

முன்னதாக நேற்றைய விசாரணையில் கரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு உரிய கொள்கை திட்டத்தை வகுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

ADVERTISEMENT
ADVERTISEMENT