இந்தியா

உத்தரகண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து

2nd Jun 2021 06:11 PM

ADVERTISEMENT

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரகண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநிலப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரவிந்த் பாண்டே தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக நேற்று பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து முடிவெடுத்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து கரோனா பரவல் காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அரவிந்த் பாண்டே புதன்கிழமை அறிவித்தார்.

ADVERTISEMENT

முன்னதாக குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT