இந்தியா

தடுப்பூசி போடவில்லையெனில் சம்பளம் இல்லை: அரசு ஊழியர்களுக்கு உ.பி. அதிரடி

2nd Jun 2021 12:57 PM

ADVERTISEMENT

 

கரோனா தடுப்பூசியை ஊக்குவிக்கும் வகையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரோசாபாத் மாவட்ட நிர்வாகம் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடவில்லையெனில், சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என்று கூறியுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ளத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மத்திய அரசும் அந்தந்த மாநில அரசும் வலியுறுத்தி வருகின்றன. வாய்ப்பிருந்தும் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சம்பளம் பிடித்தம் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. 

அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதுதொடர்பாக தலைமை மேம்பாட்டு அதிகாரி சார்ச்சிட் கௌர் கூறுகையில், 

ஊழியர்கள் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளாவிட்டால், அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மே மாதத்திற்கான அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி சந்திர விஜய் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கருவூல அலுவலர் மற்றும் பிற துறைத் தலைவர்களுக்கு இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு பட்டியலை உருவாக்கி தடுப்பூசி போடுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

ஊழியர்களின் சம்பளம் நிறுத்தப்படலாம் என்ற அச்சத்தில் தடுப்பூசி போட முன்வருவதாகத் தலைமை மேம்பாட்டு அதிகாரி தெரிவித்தார். 

Tags : vaccination
ADVERTISEMENT
ADVERTISEMENT