இந்தியா

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 10.88% சரிவு

2nd Jun 2021 05:45 PM

ADVERTISEMENT


கொச்சி: கரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி 10.88 சதவீதம் சரிவடைந்துள்ளது. 

2019 - 2020ஆம் ஆண்டில் நாட்டில் கடல் உணவு ஏற்றுமதி 12,89,651 டன்களாக இருந்த நிலையில், இது 2020-21-ஆம் ஆண்டில் 11,49,341 டன்களாகக் குறைந்துள்ளது. 2019 - 2020ஆம் ஆண்டில் இந்தியா ஏற்றுமதி செய்த கடல் உணவின் மதிப்பு ரூ.46,662.85 கோடியாகும்.  

இந்தியாவிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்யும் முன்னணி இறக்குமதியாளர்களாக அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளன. 

அதே நேரத்தில் உறைந்த இறால் முக்கிய ஏற்றுமதி பொருளாக அதன் நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதற்கடுத்த இடத்தில் உறைந்த மீன் வகை உள்ளது.

இந்த கரோனா பெருந்தொற்று காலத்தில், நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி முதல் அரையாண்டில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கடைசி காலாண்டில் நிச்சயம் மீளும் என்று கடல் உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக நிர்வாகி  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT