இந்தியா

பிகார் காவலர்கள் பணியின்போது செல்லிடப்பேசி, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை

2nd Jun 2021 11:35 AM

ADVERTISEMENT


பாட்னா: பணியின்போது சில காவலர்கள் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவதாகவும், சமூக ஊடகங்களில் எப்போதும் இருப்பதாகவும் வந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பிகாரில் காவல்துறையினர் பணியின்போது செல்லிடப்பேசி, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாகவும், தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பணியின்போது செல்லிடப்பேசியை பயன்படுத்துவது, அவர்கள் மீதான மரியாதையைக் குறைப்பதுடன், பணித்திறனும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT