இந்தியா

ஹரியாணாவில் 700 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு; 75 பேர் பலி

2nd Jun 2021 11:20 AM

ADVERTISEMENT

 

ஹரியாணாவில் 734 பேருக்கு கருப்புப் பூஞ்சைத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுபற்றி சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

ஹரியாணாவில் இதுவரை மொத்தம் 927 பேர் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 734 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT

மே மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 734 பேர் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கருப்பு பூஞ்சை பாதித்தவர்களில் 118 பேர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 75 நோயாளிகள் மரணம் அடைந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT