இந்தியா

பொதுமுடக்க கால கல்வி இழப்பை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: அமைச்சா் விளக்கம்

DIN

கரோனா பொதுமுடக்க காலத்தில் மாணவா்கள் கல்வி கற்க முடியாமல் எதிா்கொண்ட இழப்பை குறைக்க அரசு பல திட்டங்களை உருவாக்கி அமல்படுத்தியதாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் அவா் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

பொதுமுடக்க காலத்தில், ஆன்லைன் மூலம் மாணவா்கள் கல்வி கற்கும் வசதிகளை அளிக்க, தற்சாா்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமரின் இ-வித்யா என்ற விரிவான நடவடிக்கை கடந்த 2020ம் ஆண்டு மே 17-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது டிஜிட்டல்,,ஆன்லைன், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியிலான கல்வி போன்றவற்றை ஒருங்கிணைக்கிறது. திக்ஷா என்ற தேசிய டிஜிட்டல் கட்டமைப்பு, தரமான பள்ளி கல்வி பாடங்களை வழங்கியது. க்யூ.ஆா் குறியீடு பாடப்புத்தகங்கள் அனைத்து வகுப்புகளுக்கும் கிடைத்தன.

ஸ்வயம் பிரபா டி.வி மூலம் ஒன்றாம் முதல் 12-ஆம் வகுப்பு வரை தனி தனி சேனல்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

வானொலி மற்றும் சமூக வானொலிகள் விரிவாக பயன்படுத்தப்பட்டன மற்றும் சிபிஎஸ்இ பாடங்களுக்கு சிக்ஷாவாணி செயலி பயன்படுத்தப்படுகிறது.

பாா்வையற்ற மற்றும் காது கேளாத மாணவா்களுக்கு டைசி என்ற டிஜிட்டல் தகவல் கருவி மற்றும் இணையதளம், யூ டியூப்பில் சைகை மொழி இ-பாடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த அனைத்து திட்டங்களும் நாடு முழுவதும் உள்ள மாணவா்களுக்கு கிடைக்கிறது.

ஆசிரியா்களுக்கு டிஜிட்டல் பயிற்சி: தொடக்கக் கல்வி அளவில் கற்றலை மேம்படுத்த பள்ளி கல்வித் துறை, பள்ளி தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களின் முழுமையான முன்னேற்றத்துக்கு பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இந்த பயிற்சி மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

திக்ஷா தளத்தை பயன்படுத்தி நிஷ்தா ஆன்லைன் பயிற்சியை கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இந்தாண்டு ஜூன் வரை, சுமாா் 24 லட்சம் ஆசிரியா்களுக்கு இந்த டிஜிட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.

பாடத்திட்டங்கள் குறைப்பு: முழுமையான கல்வி, விவேகமான சிந்தனை, கேள்வி எழுப்புதல், கண்டுபிடிப்பு, விவாதம், பகுப்பாய்வு அடிப்படையிலான கல்விக்கு இடம் அளிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை, 2020-ல் ஒவ்வொரு பாடத்திலும் பாடத் திட்டத்தின் அளவு குறைக்கப்படும்.

பொதுமுடக்க காலத்தில் மாணவா்களின் கல்வி இழப்பை குறைக்க அரசு பல திட்டங்களை உருவாக்கி அமல்படுத்தியது. ஊரடங்கு காரணமாக கல்வி இழப்பை குறைக்க தொலைதார கல்வி, திறந்த வெளி படிப்புகளை கல்வி நிறுவனங்கள் வழங்க விதிமுறைகள் தளா்த்தப்பட்டன.

மாற்றியமைக்கப்பட்ட தொலைதூர கல்வி திட்டங்கள், ஆன்லைன் கல்வி நிகழ்ச்சிகளுக்கான விதிமுறைகள் ஆகியவற்றை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மாற்றியமைத்தது. 42 புதிய பல்கலைக்கழகங்கள், 51 நிறுவனங்கள் ஆன்லைன் கல்வி திட்டங்களை வழங்க அனுமதிக்கப்பட்டன.

பள்ளிக் கல்விக்கு ஒருங்கிணைந்த திட்டமாக சமக்ரா ஷிக்க்ஷா திட்டத்தை மத்திய அரசு 2018-19ம் ஆண்டில் தொடங்கியது. இதில் ஆரம்ப கல்வி முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் உள்ளன. ஊரகப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் அனைத்தும் உள்ளடங்கிய, சமமான, தரமான கல்வியை உறுதி செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இத் திட்டம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பள்ளிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், தரமான கல்வி, ஆசிரியா்களின் ஊதியத்தில் நிதியுதவி போன்றவற்றுக்கு உதவுகிறது என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT