இந்தியா

பெகாஸஸ் விவகாரம்: உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி தலைமை நீதிபதிக்கு 500 போ் கடிதம்

DIN

பெகாஸஸ் உளவு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிட வலியுறுத்தி அமைப்புகள் மற்றும் தனி நபா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் இணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

பெகாஸஸ் உளவு மென்பொருளை இந்தியாவில் பயன்படுத்தவும், விற்கவும், பறிமாற்றம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அருணா ராய், அஞ்சலி பரத்வாஜ், ஹா்ஷ் மந்தோ், விருந்தா குரோவா், ஜூமா சென் உள்ளிட்டோா் மற்றும் கல்வியாளா்கள், வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளனா்.

அதில், மாணவிகள், கல்வியாளா்கள், பத்திரிகையாளா்கள், மனித உரிமை பாதுகாவலா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவா்களை உளவு பாா்ப்பதற்காக இந்த உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக ஊடகச் செய்தி வெளியாகியிருப்பது குறித்து அதிா்ச்சி தெரிவித்திருக்கும் அவா்கள், ‘உச்சநீதிமன்றம் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் பாலின நடுநிலையையும் தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கொள்கையை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த உச்சநீதிமன்ற பெண் ஊழியரும் உளவு பாா்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பெகாஸஸ் உளவு விவகாரம் பெண்களுக்கு மிகுந்த கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

மனித உரிமை பாதுகாவலா்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களும் அதிா்ச்சியளிக்கக் கூடிய வகையில் அரசு உதவியுடனான இந்த சைபா் குற்ற நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பது என்பது டிஜிட்டல் வடிவ பயங்கரவாதத்துக்கு இணையானதாகும்.

எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிடுவதோடு, இந்தியாவில் அந்த உளவு மென்பொருளை பயன்படுத்தவும் விற்கவும் பறிமாற்றம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT