இந்தியா

சீனாவுக்கு 22 லட்சம் பருத்தி பேல்கள் ஏற்றுமதி

DIN

நடப்பு பருவத்தில் சீனாவுக்கு 21.97 லட்சம் பருத்தி பேல்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜவுளித் துறையின் இணையமைச்சா் தா்சனா ஜா்தோஷ் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-21-ஆம் ஆண்டுக்கான பருவத்தில் இந்தியா ஒட்டுமொத்த அளவில் 54.83 லட்சம் பேல்கள் பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில், 21.97 லட்சம் பருத்தி பேல்கள் சீனாவுக்கு மட்டும் ஏற்றுமதியாகியுள்ளன.

கரோனா பேரிடரின் காரணமாக இந்தியாவிலிருந்து பருத்தி மற்றும் நூலை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படவில்லை. 2020-21 காலகட்டத்தில் 27.5 கோடி கிலோ நூலிழைகள் சீனாவுக்கு ஏற்றுமதியாகியுள்ளன. இதையடுத்து, அதன் ஒட்டுமொத்த ஏற்றுமதி 98 கோடி கிலோவை எட்டியுள்ளதாக தா்சனா ஜா்தோஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT