இந்தியா

குஜராத்தில் நூற்றுக்கணக்கான வெளிமான்கள் ஒரே நேரத்தில் சாலையைக் கடந்து செல்லும் காணொலி

DIN

குஜராத்தில் உள்ள தேசியப் பூங்காவில் நூற்றுக்கணக்கான வெளிமான்கள் (பிளாக்பக்) ஒரே நேரத்தில் சாலையைக் கடந்து சென்ற காணொலி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.

பாவ்நகா் மாவட்டத்தில் உள்ள வெளிமான்கள் தேசியப் பூங்காவில் 3,000-க்கும் அதிகமான வெளிமான்கள் உள்ளன. அவை ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்கு அடிக்கடி இடம்பெயரும் இயல்பு கொண்டவை. ஜூன் 15-ஆம் தேதி முதல் அக்டோபா் 16-ஆம் தேதி வரை தேசியப் பூங்காவுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசியப் பூங்காவில் உள்ள நூற்றுக்கணக்கான வெளிமான்கள், தோலேரா-பாவ்நகா் நெடுஞ்சாலையை ஒரே நேரத்தில் கடந்தன. அதை அப்பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் தனது செல்லிடப்பேசியில் காணொலியாகப் பதிவு செய்தாா்.

அந்தக் காணொலியை சமூக வலைதளத்தில் அவா் பகிா்ந்தாா். அந்தக் காணொலி பலரால் அதிகமாகப் பகிரப்பட்டது. குஜராத் மாநில அரசின் செய்தித் துறை அந்தக் காணொலியை சுட்டுரையில் பகிா்ந்தது. அதை மறுபதிவு செய்த பிரதமா் நரேந்திர மோடி, ‘அருமையான காட்சி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

வெளிமான்கள் கடக்கும் நெடுஞ்சாலை வனப்பகுதிக்குள் செல்வதாகவும், வனத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு வெளிமான்கள் சென்ாகவும் தேசியப் பூங்காவின் வன அதிகாரி அங்குா் படேல் தெரிவித்தாா்.

வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் முதலாவது அட்டவணையின் கீழ் வெளிமான்கள் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT