இந்தியா

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

30th Jul 2021 11:03 AM

ADVERTISEMENT

பெகாஸஸ் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 8வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்கசிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு

ADVERTISEMENT

இந்நிலையில், பெகாஸஸ் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கூட்டத்தில், திமுகவின் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு, விசிக திருமாவளவன், மதிமுக வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags : Oppostion leaders Rajya sabha Pegasus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT