இந்தியா

இந்தியா உள்ளிட்ட 10 நாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த பிலிப்பின்ஸ்

30th Jul 2021 08:20 PM

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுவதாக பிலிப்பின்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடை விதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிக்க | ஆந்திரத்தில் புதிதாக 2,068 பேருக்கு கரோனா தொற்று

இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் கரோனா தொற்று சூழல் காரணமாக இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜூலை 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஜப்பானில் மேலும் 4 நகரங்களில் கரோனா அவசரநிலை அறிவிப்பு

இந்நிலையில் இந்த அறிவிப்பை மேலும் 15 நாள்களுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளின் பயணிகளுக்கு பிலிப்பின்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

Tags : Philippines Travel ban
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT