இந்தியா

பெகாஸஸ் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை

30th Jul 2021 12:39 PM

ADVERTISEMENT

பெகாஸஸ் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், உயர்மட்ட அரசு அலுலவர்கள் உள்ளிட்டோர் பெகாஸஸ் மென்பொருள் மூலம் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்ததாக தி வயர் நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தக் கோரி மூத்த பத்திரிகையாளர்கள் என். ராம், சசி குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

என். ராம், சசி குமார் ஆகியோருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "தனி மனிதச் சுதந்திரத்தில் இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் . பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள் ஆகியோர் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்துள்ளனர்" என வாதம் முன் வைத்தார்.

ADVERTISEMENT

இதற்கு பதில் அளித்த நீதிபதி, "பணிச்சுமையை பொறுத்து இந்த விவகாரம் அடுத்த வாரத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும்" என்றார். 

பெகாஸஸ் மென்பொருளுக்கான உரிமம் வாங்கப்பட்டு நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ வேவு பார்க்கப்பட்டதா என்பதை  தெளிவுப்படுத்த உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Pegasus supreme court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT