இந்தியா

பிற்பகல் 2.30 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு

30th Jul 2021 01:15 PM

ADVERTISEMENT

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து மாநிலங்களவை இன்று பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 8 தினங்களாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அவையின் மாண்பை குலைக்கும் விதமாக உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டாம் என்று இரு அவைத் தலைவர்களும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதையும் படிக்க | மனிதநேயம் செத்துவிட்டதா? விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்!

இந்நிலையில் இன்று காலை கூடிய மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதையடுத்து பிற்பகல் 12.30 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தொடங்கிய அவையில் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

Tags : monsoon session parliament
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT