இந்தியா

சுதந்திர தின உரை: கருத்து கேட்கும் பிரதமர்

30th Jul 2021 01:00 PM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தில் நடைபெறும் விழாவில் பிரதமரின் உரையில் சேர்க்க வேண்டிய மக்களின் கருத்துகளை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது.

தில்லியில் உள்ள செங்கோட்டையில், நாட்டின் 75ஆவது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி வைத்து உரையாற்றவுள்ளார்.

இதையும் படிக்க | மனிதநேயம் செத்துவிட்டதா? விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்!

பிரதமரின் உரையில் சேர்க்க வேண்டிய மக்களின் கருத்துகளை தெரிவிக்க பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டிவிட்டரில், சுதந்திர தினவிழாவில் உங்கள் கருத்து செங்கோட்டையில் ஒலிக்க வேண்டுமானால், பிரதமரின் உரையில் சேர்ப்பதற்கு @myindia என்ற டிவிட்டர் பக்கத்தை டேக் செய்து கருத்துகளை பதிவிடலாம் என தெரிவித்துள்ளனர்.  

Tags : Independence Day red fort Modi speech
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT