இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இதுவரை இத்தனை கோடி செலவு? : ஆண்டு பட்ஜெட் ரூ.1289 கோடி

30th Jul 2021 03:06 PM

ADVERTISEMENT

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு தற்போது வரை ரூ.238 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் டிசம்பர் மாதம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். கரோனா காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த புதிய கட்டடம் அவசியமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. 

இந்த நிலையில் மாநிலங்களவையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், ''மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றம் கட்டுவது, புதிய விஸ்டா பகுதி மறுகட்டமைப்பு ஆகிய இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு தற்போது வரை ரூ.238 கோடியும், மத்திய விஸ்டா பகுதியை மறுகட்டமைக்க தற்போது வரை ரூ. 63 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு ரூ.971 கோடி வரை ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

மேலும் மத்திய விஸ்டா பகுதியின் மறுகட்டமைப்பிற்கு ரூ.608 கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் வருகிற நவம்பர் 2021 ஆம் ஆண்டு முடிவடையும் எனவும் எதிர்பார்க்கலாம். இந்த இரண்டு திட்டங்களுக்கும் 2021-22 நிதியாண்டின்படி ரூ.1,289 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாடாளுமன்றத்தின் பாரம்பரியமிக்க கட்டடங்கள் எதுவும் மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் இடிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. கட்டுமானப் பணிகள் நடைபெறும்பொழுது தேசிய அருங்காட்சியகங்கள் ஆய்வு மேற்கொள்பவர்களுக்காக திறக்க்படும் என்றும் கூறியது. 

Tags : central government parliament New Parliament Central vista
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT