இந்தியா

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் வெளியானது

30th Jul 2021 02:17 PM

ADVERTISEMENT

சிபிஎஸ்இ 2020-21 கல்வியாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாகியுள்ளன. 

கரோனா பரவல் காரணமாக கடந்த 2020-21 கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கான மதிப்பெண்களை, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் தலா 30 சதவீதமும், 12 ஆம் வகுப்பு பருவத் தேர்வு, செய்முறைத் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களில் 40 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதன்படி கணக்கிடப்பட்ட மதிப்பெண் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

மேலும், மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு கரோனா பரவல் குறைந்த பின்னர் தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்ககேலி, கிண்டல்களை கடந்து போலீஸ் அதிகாரியான திருவண்ணாமலையைச் சேர்ந்த திருநங்கை சிவன்யா! 

Tags : CBSE Plus 2 results
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT