இந்தியா

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்: 65,000 மாணவர்களுக்கு முடிவுகள் வெளியாகவில்லை

PTI

சிபிஎஸ்இ 2020-21 கல்வியாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியான நிலையில் 65,000 மாணவர்களின் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

கரோனா பரவல் காரணமாக கடந்த 2020-21 கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கான மதிப்பெண்களை, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் தலா 30 சதவீதமும், 12 ஆம் வகுப்பு பருவத் தேர்வு, செய்முறைத் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களில் 40 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதன்படி கணக்கிடப்பட்ட மதிப்பெண் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தாண்டு 14.30 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 70,004 மாணவர்கள் 95 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்நிலையில், 65,184 மாணவர்களின் முடிவுகள் இன்று வெளியாகவில்லை.

இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறியது,

இந்தாண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 1,060 பள்ளிகளில் பயின்ற 65,184 மாணவர்களின் முந்தைய ஆண்டுகளுக்கான மதிப்பெண் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் இன்று முடிவுகள் வெளியிடவில்லை. எனினும், ஆகஸ்ட் 5ஆம் தேதி அவர்களுக்கு மதிப்பெண் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT