இந்தியா

ஆக. 3ல் பாஜக நாடாளுமன்றக்குழுக் கூட்டம்

30th Jul 2021 01:04 PM

ADVERTISEMENT

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் தில்லியில் நடைபெறவுள்ளது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் பெகாஸஸ் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதால் இரு அவைகளும் முடங்கி வருகின்றன. 

இதையும் படிக்க | மனிதநேயம் செத்துவிட்டதா? விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்!

கடந்த ஜூலை 27 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. தில்லியில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நிறைவுபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | வதந்திக்கு விடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஷகீலா

Tags : monsoon session parliament
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT