இந்தியா

மனிதநேயம் செத்துவிட்டதா? விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்!

30th Jul 2021 11:35 AM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகத்தின் ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூர் பகுதியில் புதன்கிழமை இரவு 60க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கோணிப்பைகளில் போட்டு கட்டி சக்லேஷ்பூர் - பேகூர் சாலையில் வீசியுள்ளனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டதில் அதில் 14 குரங்குகள் உயிருடன் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த 14 குரங்குகளையும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்று தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஞ்சிய 46 குரங்குகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. 

இதையும் படிக்க |  கேரள மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்: ராகுல் காந்தி வேண்டுகோள்

ADVERTISEMENT

60க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு விஷம் கொடுத்து,  பைகளில் அடைத்து வீசப்பட்ட இந்த சம்பவம் காவல்துறையினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து கர்நாடக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குரங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விலங்குகளின்  மீதான இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். 

இதையும் படிக்ககவர்ச்சிகர விளம்பர வலையில் வீழும் மக்கள்...

Tags : monkeys Karnataka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT