இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: ஆக. 2 வரை நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைப்பு

DIN

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்வதால் இன்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென கடந்த 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை கூடிய மக்களவையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளிகளுக்கு இடையே காப்பீட்டு திருத்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். இதன்பின், ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 11 மணிவரை அவையை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார். 

அதேபோல், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT