இந்தியா

தெலங்கானா : கார் விபத்தில் 5 பேர் பலி 

30th Jul 2021 01:46 PM

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியில் விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக கார் விழுந்தது. இதில் காரில் பயணித்தவர்கள் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் இருந்து உஸ்னாபாத் நோக்கி  சென்றுகொண்டிருந்தத கார்  சின்ன முல்கனூரு என்ற இடத்தில் ஒரு வளையில் கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்பாராத நேரத்தில்  சாலையோரம் உள்ள ஆழமான விவசாய கிணற்றில் பாய்ந்தது. அப்போது காரில் இருந்தவர்களின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர்.

இதையும் படிக்கமாநிலங்களின் கையிருப்பில் 2.92 கோடி தடுப்பூசிகள்: சுகாதாரத்துறை

ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக கிணற்றில் மூழ்கியது. தகவல் அறிந்து கரீம்நகர் தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கார் மீட்கப்பட்டது. 

ADVERTISEMENT

ஆனால் பயணித்தவர்கள் யாரும் காரில் இல்லாததால் அவர்கள் இறந்திருக்கலாம் என தேடுதலில் ஈடுபட்டனர் . தற்போது 3 பேர் வரை இறந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களின் உடலையைக் கைப்பற்றி  அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

விபத்து குறித்து கரீம்நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : accident Telangana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT