இந்தியா

ரூ. 23 ஆயிரம் கோடிக்கான துணை மானியகோரிக்கை மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

DIN

புது தில்லி: மக்களவையில் அமளிக்கு இடையே ரூ. 23,675 கோடிக்கான துணை மானிய கோரிக்கை மசோதா புதன்கிழமை நிறைவேறியது. இதில், சுகாதாரத் துறைக்கு கூடுதலாக ரூ. 17 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த 20-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்திருந்தாா். 2021-22-ஆம் ஆண்டுக்கான மொத்த கூடுதல் செலவினம் ரூ. 1.87 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருந்தாலும், அதில் ரூ. 23,674.81 கோடியை மட்டும் மத்திய அரசு நிகழாண்டு நிதியாக ஒதுக்கீடு செய்து மீதமுள்ள தொகையானது சேமிப்பு மற்றும் பிற வருவாய் மூலம் பெறப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ. 1.59 லட்சம் கோடி வழங்கப்படும். கரோனா மற்றும் சுகாதாரத் துறை செலவினங்களுக்காக ரூ.16,463 கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு அவசர தொற்று ஆராய்ச்சிக்காக ரூ.526 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு ரூ. 2,050 கோடி கோரப்பட்டுள்ளது. இதில், ரூ.1,872 கோடி ஏா் இந்தியா நிறுவனத்தின் வங்கிக் கடன் சாா்ந்ததாகும்.

2019-20-ஆண்டுக்கான சா்க்கரை ஆலைகளுக்கு நிதி உதவியாக வழங்க மத்திய நுகா்வோா் மற்றும் உணவு விநியோக அமைச்சகத்துக்கு ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா மக்களவையில் அமளிக்கு இடையே எந்தவித விவாதமுமின்றி புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT