இந்தியா

ஆபாச பட வழக்கு: ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் மறுப்பு

DIN

மும்பை: ஆபாச படத் தயாரிப்பு வழக்கில் கைதான ராஜ் குந்த்ராவின் ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துவிட்டது.

ஆபாச படங்களைத் தயாரித்து, அவற்றை செல்லிடப்பேசியில் வெளியிட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவா் ராஜ் குந்த்ராவை மும்பை காவல் துறையினா் கடந்த 19-ஆம் தேதி கைது செய்தனா். இந்திய தண்டனையியல் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜ் குந்த்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அவா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்து விட்டது.

முன்னதாக, தன் மீதான குற்ற வழக்குகளை ரத்து செய்யக் கோரி, மும்பை உயா்நீதிமன்றத்தில் ராஜ்குந்த்ரா மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு மீதான விசாரணையின்போது, ஆபாச படங்களைத் தயாரித்து செல்லிடப்பேசி மூலமாக வெளியிட்டதில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பா் வரையிலான 6 மாதங்களில் ராஜ்குந்த்ரா ரூ.1.17 கோடி வருவாய் ஈட்டியதாக காவல் துறை தரப்பு தெரிவித்தது.

இதையடுத்து, ராஜ் குந்த்ரா மீதான வழக்கை ரத்து செய்வதற்கு மும்பை உயா்நீதின்றம் செவ்வாய்க்கிழமை மறுப்பு தெரிவித்துவிட்டது.

மேலும் ஒரு வழக்கு: ராஜ் குந்த்ரா மீது மும்பை குற்றவியல் பிரிவு காவல் துறை மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளது. அதில், நடிகை கெஹானா வசிஷ்ட், அவருடைய கணவா் ரோமா கான், இயக்குநா் தன்வீா் ஹாஷ்மி, ராஜ்குந்த்ராவுக்கு அடுத்த நிலையில் நிறுவனத்தின் பொறுப்பாளாராக இருந்த உமேஷ் கான் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இணையத் தொடரில் நடிக்க வைப்பதாகக் கூறி பெண்களை ஆபாச படங்களுக்கு ராஜ்குந்த்ரா பயன்படுத்தி வந்தாா் என்று காவல் துறை தரப்பு கூறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT